SELANGOR

ஜொகூர் மாநிலத்தில் வெள்ள நிலைமை மேம்பட்டு வருகிறது

16 மார்ச் 2023, 3:08 AM
ஜொகூர் மாநிலத்தில் வெள்ள நிலைமை மேம்பட்டு வருகிறது

ஜொகூர் பாரு, மார்ச் 16: வெள்ளப் பேரிடரில் இருந்து முழுமையாக மூவார் மாவட்டம் மீண்டுள்ளது. இதனால், ஜொகூர் மாநிலத்தில் வெள்ள நிலைமை மேம்பட்டு வருகிறது.

கடந்த செவ்வாய் அன்று 4 மணி அளவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 35,230 பேராகப் பதிவான நிலையில், நேற்று இரவு 8 மணி நிலவரப்படி மூன்று மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 33,245 ஆக குறைந்துள்ளது என மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்தது.

"இதுவரை, பத்து பஹாட், தங்காக் மற்றும் செகாமட் மாவட்டங்களில் மொத்தம் 107 தற்காலிகத் தங்கும் மையங்கள் இன்னும் திறக்கப்பட்டுள்ளன.

பத்து பஹாட் மாவட்டச் செயலகத்தை நேற்று மாலை பெர்னாமா தொடர்பு கொண்ட போது மாவட்டத்தில் சில பகுதிகளில் நீர் மட்டம் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"நல்ல வானிலை காரணமாகப், பாதிக்கப்பட்டவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று அவர் கூறினார்.

– பெர்னாமா

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.