SELANGOR

முகாம்களின் உரிமையாளர்கள் உள்ளூர் அதிகார சபையில் பதிவு செய்ய வேண்டும்

14 மார்ச் 2023, 8:04 AM
முகாம்களின் உரிமையாளர்கள் உள்ளூர் அதிகார சபையில் பதிவு செய்ய வேண்டும்

ஷா ஆலம், மார்ச் 14: சபாக் பெர்ணம் நகராட்சி நிர்வாகப் பகுதியில் உள்ள முகாம்களின் உரிமையாளர்கள் அல்லது நடத்துபவர்கள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் அதன் நடவடிக்கைகளை உள்ளூர்  ஊராட்சி மன்றங்களில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

QR குறியீடு அல்லது https://ls.selangor.my/2sq8x3 என்ற இணைப்பை ஸ்கேன் செய்வதன் மூலம் இணையத்தில் பதிவு செய்யலாம் என்று உள்ளூர் அதிகாரசபை (PBT) முகநூல் மூலம் தெரிவித்துள்ளது.

மேலும் தகவலுக்கு, சபாக் பெர்ணம் நகராட்சி பொதுமக்கள் மேம்பாட்டுத் திட்டத் துறையை 03-32241655 நீட்டிப்பு 265 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பிப்ரவரி 1 முதல் சிலாங்கூரில் உள்ள அனைத்து முகாம்களும் டிசம்பர் 2022இல் பத்தாங் காலியில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து பொதுமக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க உள்ளூர் அதிகாரசபையில் பதிவு செய்ய வேண்டும்.

முன்னதாக, வருகையாளர்களின்  பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முகாம் நடவடிக்கைகளின் விதிமுறைகள் தொடர்பான வழிகாட்டுதல்கள் அமல்படுத்தப்படும் என்று டத்தோ மந்திரி புசார் டத்தோ அமிருடின் ஷாரி கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.