|
ஷா ஆலம், மார்ச் 13: இந்த ஞாயிற்றுக்கிழமை பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கிளானா ஜெயா ஏரியில், மொத்தம் RM10,000 ரொக்கப் பரிசை வழங்கும் பெட்டாலிங் ஜெயா ஜோரன் 2023 மீன் பிடிக்கும் போட்டியில் பங்கேற்க மீன் பிடிப்பதில் ஆர்வமுள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ள இப்போட்டி காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும். அந்நிகழ்வில் மீன்பிடி பொருட்கள் மற்றும் 32 அங்குல தொலைக்காட்சி அதிர்ஷ்டக் குலுக்குப் பரிசாக வழங்கப்படும். இதில் பங்கேற்கும் 105 பேருக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும். முதல் நிலைக்கு RM6,000, இரண்டாம் நிலைக்கு RM2,000 மற்றும் மூன்றாம் நிலைக்கு RM1,000 வழங்கப்படும். 800 பங்கேற்பாளர்களை இலக்காகக் கொண்டு இந்த நிகழ்வில், பங்கேற்பு கட்டணம் ஒருவருக்கு RM50 மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு (OKU) RM40 ஆகும். மேலும், முதல் 500 பங்கேற்பாளர்களுக்கு இலவச டி-ஷர்ட் வழங்கப்படும். போட்டி நடைபெறும் இடத்தில் மார்ச் 18ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 1 மணி முதல் இரவு 10 மணி வரை மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணி அளவில் இப்போட்டியில் பங்கேற்கப் பதிவு செய்யலாம். ஏதேனும் கேள்விகள் இருந்தால் 013-266 7011, 012-284 6811, 012-355 4946 அல்லது கலை, சமூக மற்றும் சுற்றுலா கலாச்சாரப் பிரிவுக்கு 03-7781 0178 என்ற எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம். |
SELANGOR
பெட்டாலிங் ஜெயாவில் ஜோரன் 2023 மீன் பிடிக்கும் போட்டி
13 மார்ச் 2023, 9:38 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
ஜோஹான் செத்தியாவில் மோசமடைந்தது காற்றின் தரம்
Media Selangor Team
13 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூரின் மூன்று ஊராட்சி அமைப்புகளுக்கு தேசிய அளவில் அங்கீகாரம்
Media Selangor Team
13 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூரில் காற்றுத் தரம் மேம்பட்டுள்ளது
Media Selangor Team
13 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூர் அரையாண்டு முதலீட்டு மதிப்பு RM70 பில்லியன்; சேவை, உற்பத்தித் துறைகள் முக்கிய பங்கு
Bernama
12 செப்டெம்பர் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



