SELANGOR

துங்கு அப்துல் ரஹ்மான் நினைவகத்தை டத்தோ மந்திரி புசார் திறந்து வைத்தார்

11 மார்ச் 2023, 8:24 AM
துங்கு அப்துல் ரஹ்மான் நினைவகத்தை டத்தோ மந்திரி புசார் திறந்து வைத்தார்

சுபாங் ஜெயா, மார்ச் 11: கம்போங் துங்கு தேசியப் பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள துங்கு அப்துல் ரஹ்மான் நினைவகத்தை டத்தோ மந்திரி புசார் நேற்று திறந்து வைத்தார்.

ஒரு சுருக்கமான விழாவில், கம்போங் துங்கு  சட்டமன்ற  உறுப்பினர்  லிம் யி வெய்  (ADN) அவர்களால் 2019 இல் முழுமையாக கட்டிமுடிக்கப்பட்ட நினைவுச்சின்னத்தின் மறுசீரமைப்பு மற்றும் செயல்முறை குறித்து சட்டமன்ற உறுப்பினர்,  மந்திரி புசார்  டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு விளக்கினார்.

நினைவிடத்துக்கு வருகை  அளித்த பின், டத்தோ மந்திரி புசார் உள்ளூர் வாசிகளுடன்  அங்குள்ள மக்கள்  குறைகளை  கேட்டறிந்தார். அதன் பின் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு  கம்போங் துங்கு மசூதிக்குச் சென்றதுடன் மசூதியின் வசதிகளை ஆய்வு செய்ததோடு, மக்களின் தேவைகள் மற்றும் புகார்களையும் செவிமடுத்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.