SELANGOR

ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை தூய்மைப்படுத்தும் அடுத்த  கட்ட பணியின் அவசியத்தை மாநில அரசு பரிசீலிக்கும்

11 மார்ச் 2023, 6:17 AM
ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை தூய்மைப்படுத்தும் அடுத்த  கட்ட பணியின் அவசியத்தை மாநில அரசு பரிசீலிக்கும்

லாபிஸ், மார்ச் 11: ஜொகூரில் வெள்ள சேதத்தை தூய்மைப்படுத்தும் பணிக்கு  இரண்டாம் கட்டமாக உதவி அனுப்ப வேண்டியதன் அவசியத்தைப் பரிசீலிக்க மாநில அரசு தயாராக உள்ளது.

மனித மூலதன மேம்பாட்டு எஸ்கோ முகமட் கைருடின் ஓத்மான், தற்போது உள்ள நிலையை நிர்வகிக்க பல அனுபவமிக்க உறுப்பினர்கள் சிலாங்கூரில் உள்ளனர் என்றார்.

"ஜொகூர் உள்ளூர் அதிகார சபை எங்களிடம் உதவி பணியைத் தொடருமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இதற்குப் பிறகு நாங்கள் இரண்டாம் கட்டத்தைப் பற்றி யோசிப்போம்.

“எங்களிடம் பல தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் உடைமைகள் உள்ளன, அவை வெள்ளப் பகுதிகளில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க ஏற்றது.

"சிலாங்கூர், பகாங் மற்றும் கெடாவில் ஏற்பட்ட பேரிடர்களை நிர்வகித்ததற்கான அனுபவத்தைப் பயன்படுத்தி உதவுவோம்" என்று அவரை இன்று சந்தித்தபோது கூறினார்.

இருப்பினும், இந்த விவகாரத்தை டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மட்டுமே முடிவு செய்வார் என்றார்.

"இரண்டாம் கட்டம் தூய்மைப்படுத்தும் பணிக்கான அவரின் உத்தரவு மற்றும் அறிவுறுத்தல்களுக்கு நாங்கள் காத்திருக்கிறோம்," என்று அவர் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.