SELANGOR

பல்வேறு துறையைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் குறிப்பாக  மாற்றுத்திறனாளிகள்  தொழில் பயிற்சி  பெற – அனிஸ் அழைப்பு

11 மார்ச் 2023, 6:14 AM
பல்வேறு துறையைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் குறிப்பாக  மாற்றுத்திறனாளிகள்  தொழில் பயிற்சி  பெற – அனிஸ் அழைப்பு

ஷா ஆலம், மார்ச் 11: சிலாங்கூர் சிறப்பு குழந்தைகள் துறை (அனிஸ்), அத்துறையில் பல்வேறு துறையை சார்ந்த உயர்கல்விக்கூட மாணவர்களைப் (IPT)  தொழில் பயிற்சி பெற அழைக்கிறது.

அதன் தலைவர் டேனியல் அல்-ரஷீத் ஹரோன், இந்த சலுகை அனைத்து மாணவர்களுக்கும் திறக்கப் பட்டுள்ளது, ஆனால் மாற்றுத் திறனாளிகளின் (OKU) விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்,`` என்றார்.

"நாங்கள் ஆண்டு முழுவதும் விண்ணப்பங்களை வரவேற்கிறோம், ஆனால் தொழில்துறை பயிற்சியைப் பெற இரண்டு முதல் மூன்று மாணவர்களை மட்டுமே எங்களால் தேர்வு செய்ய முடிகிறது.

"இந்த மாணவர்களுக்கு நிர்வாகத்தின் அடிப்படையில் நாங்கள் வழிகாட்டுவோம், மேலும் அனிஸ் செயல்படுத்தும் அனைத்து திட்டங்களிலும் அவர்களை ஈடுபடுத்துவோம்" என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

தொழில் பயிற்சியில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு அனிஸ் RM500 மாதாந்திர உதவித் தொகையையும் வழங்குகிறது என்று டேனியல் கூறினார்.

விண்ணப்பதாரர் மலேசியா பிரஜை, 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும், தற்போது கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ அல்லது இளங்கலை பட்டப்படிப்பைப் படித்து வருபவராக இருத்தல் வேண்டும்.

ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பம், கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வக் கடிதம் மற்றும் தொடர்புடைய சான்றிதழ்களுடன் japatananis@yawas.my என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம் மற்றும் ஏதேனும் கேள்விகள் இருந்தால் 03-5545 3170 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.