SELANGOR

சிலாங்கூர் வேளாண் சந்தையில் விற்பனை - புக்கிட் மெலாவத்தி தொகுதி

11 மார்ச் 2023, 2:55 AM
சிலாங்கூர் வேளாண் சந்தையில் விற்பனை - புக்கிட் மெலாவத்தி தொகுதி

ஷா ஆலம், மார்ச் 11: புக்கிட் மெலாவத்தி தொகுதியில்,  தோட்டங்களில் இருந்து நேரடியாக வரும் பொருட்களைப் பெற விரும்புவோர் இந்த ஞாயிற்றுக்கிழமை புக்கிட் கூச்சிங் இளைஞர் மையத்தில் உள்ள சிலாங்கூர் வேளாண் சந்தைக்கு (SAM) அழைக்கப்படுகிறார்கள்.

புக்கிட் மெலாவத்தி தொகுதியின் மக்கள் சேவை மையம் மத்திய வேளாண் சந்தைப்படுத்தல் வாரியம் (Fama) மற்றும் புக்கிட் கூச்சிங் மாநகராட்சி ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்த இந்த விற்பனை நியாயமான விலையில் காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும்.

ஈரமான மற்றும் உலர் பொருட்கள், பேஸ்ட்ரிகள், காய்கறிகள், பழங்கள், மரக்கன்றுகள் மற்றும் பல வகையான உணவுகள் இந்நிகழ்வில் விற்கப்படும் என்று பிரதிநிதி ஜுவைரியா சுல்கிஃப்லி கூறினார்.

"மாநில அரசு வழங்கும் திட்டங்களுக்கான பதிவும் இந்நிகழ்வில் இடம்பெறும். அதே நேரத்தில் சிலாங்கூர் சமூகச் சுகாதார தன்னார்வலர்கள் (சுகா) சுகாதாரப் பரிசோதனை கவுண்டரையும் ஏற்பாடு செய்துள்ளதாக," அவர் முகநூல் மூலம் கூறினார்.

முதல் 100 வருகையாளர்களுக்கு RM5 மதிப்புள்ள இலவச ஷாப்பிங் கூப்பன் வழங்கப்படும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.