SELANGOR

1,724 ஜோம் ஷாப்பிங் வவுச்சர்கள் ஸ்கிம் மெஸ்ர உசிய எமாஸ் (SMUE) உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது - சுங்கை துவா தொகுதி

7 மார்ச் 2023, 2:47 AM
1,724 ஜோம் ஷாப்பிங் வவுச்சர்கள் ஸ்கிம் மெஸ்ர உசிய எமாஸ் (SMUE) உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது - சுங்கை துவா தொகுதி

செலாயாங், மார்ச் 7: சுங்கை துவா தொகுதியில் ஜனவரி முதல் கடந்த வாரம் வரை மொத்தம் 1,724 ஜோம் ஷாப்பிங் வவுச்சர்கள் ஸ்கிம் மெஸ்ர உசிய எமாஸ் (SMUE) திட்டத்தில் பதிவு கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

சுங்கை துவா தொகுதியின் சமூகச் சேவை மைய மேலாளர் மைமோன் மிஸ்மான், இன்னும் 2,276 உறுப்பினர்கள் வவுச்சர்களை பெற்று கொள்ள தனது தரப்பு காத்திருப்பதாகக் கூறினார்.

"இந்த ஆண்டு, மொத்தம் 4,000 பதிவு செய்யப்பட்ட மூத்தக் குடிமக்கள் வவுச்சர்களை பெற தகுதியுடையவர்கள். அவர்கள் ஒவ்வொரு திங்கள் முதல் வெள்ளி வரை வவுச்சர்களை பெற்று கொள்ள சுங்கை துவா தொகுதியின் பிகேஎம் அலுவலகத்துக்கு வரலாம்," என்று அவர் கூறினார்.

ஜனவரி முதல் கடந்த வாரம் வரை ஸ்கிம் மெஸ்ர உசிய எமாஸ் திட்டத்திற்கு சுமார் 400 புதிய பதிவுகளை பெற்றதாகக் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.