SELANGOR

சிலாங்கூர் சர்வதேச ஹலால் மாநாட்டின் (செல்ஹாக்) இரண்டாவது பதிப்பு மார்ச் 10 ஆம் தேதி தொடங்கும்

6 மார்ச் 2023, 9:05 AM
சிலாங்கூர் சர்வதேச ஹலால் மாநாட்டின் (செல்ஹாக்) இரண்டாவது பதிப்பு மார்ச் 10 ஆம் தேதி தொடங்கும்

ஷா ஆலம், மார்ச் 6: உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழில்துறை  முனைவோர்களை ஒன்றிணைக்கும் சிலாங்கூர் சர்வதேச ஹலால் மாநாட்டின் (செல்ஹாக்) இரண்டாவது பதிப்பு மார்ச் 10 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் (WTCKL) 'சிலாங்கூர், சர்வதேச ஹலால் நுழைவாய்' என்ற கருப்பொருளுடன் மார்ச் 12 வரை மூன்று நாட்களுக்கு இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

வணிக மன்றங்கள், இஸ்லாமிய நிதி, கண்காட்சிகள், வணிக பொருத்தம், ஹலால் விநியோக சங்கிலி மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் உள்ளிட்ட ஆறு நிகழ்வுகள் மாநாட்டில் இடம்பெறும்.

இந்நிகழ்வு RM50 மில்லியன் வணிகப் பரிவர்த்தனையை இலக்காகக் கொண்டு பெரிய அளவில் நடத்தப்படவுள்ளது. கிட்டத்தட்ட 200 தொழில்துறைமுனைவோர் இக்கண்காட்சியில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.