SELANGOR

`’சமூகம் சார்பு  திட்டம் 2’’ தொடர்கிறது - பண்டார் உத்தாமா தொகுதி

3 மார்ச் 2023, 9:26 AM
`’சமூகம் சார்பு  திட்டம் 2’’ தொடர்கிறது - பண்டார் உத்தாமா தொகுதி

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 3: பண்டார் உத்தாமா தொகுதியில்  ’சமூகம் சார்பு  திட்டம் 2  ``Pro Community 2.0`` மானியத் திட்டம் இந்த ஆண்டும் தொடர்கிறது.

அதன் பிரதிநிதி ஜமாலியா ஜமாலுடின் கூறுகையில், இந்த ஆண்டில் இத்திட்டத்திற்காக மொத்தம் RM10,000 யை, அவரது அலுவலகம் ஒதுக்கி உள்ளது.

" மொத்தம் RM150,000 சட்டமன்ற ஒதுக்கீட்டில்  RM10,000 வரை இத்திட்டத்திற்கு ஒதுக்குகிறோம். இந்த ஆண்டு நான்காவது முறையாக இந்த மானியம் செயல்படுத்தப்பட்டுள்ளது, ``என்றார்

"இந்த ஒதுக்கீட்டை (மானியம்) அனைத்து பதிவு செய்யப்பட்ட குடியிருப்பாளர்  அமைப்புகளுக்கும் நாங்கள் வழங்குகிறோம்," என்று அவர் கூறினார்.

ஜமாலியாவின் கூற்றுப்படி, குடியிருப்பாளர்களால் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் சமூகத் தோட்டத் திட்டம், குடியிருப்புப் பகுதிகளின் பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்துதல், உணவுக் கழிவுகளை உரமாக்குதல் மற்றும் சோலார் விளக்குகள் போன்ற மறுசுழற்சி திட்டங்கள் ஆகியவை அடங்கும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.