SELANGOR

வார இறுதியில் உலு லங்காட், கோல லங்காட்டில் கித்தா  சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வு

2 மார்ச் 2023, 1:37 PM
வார இறுதியில் உலு லங்காட், கோல லங்காட்டில் கித்தா  சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வு

ஷா ஆலம், மார்ச் 2- சிலாங்கூர் மாநில அரசின் புதிய மற்றும் தரம் உயர்த்தப்பட்ட  நலத் திட்டங்களை  மக்களுக்கு அறிமுகப்படுத்தும் ஜெலாஜா கித்தா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வு வார இறுதியில் உலு லங்காட் மற்றும் கோல லங்காட் மாவட்டங்களில் நடைபெற உள்ளது.

ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் என்று முன்பு அழைக்கப்பட்ட இந்த நிகழ்வு வரும் மார்ச் 4ஆம் தேதி உலு லங்காட், தாமான் இம்பியான் ஏசான் கேஆர்டி திடலில நடைபெறும்.

கோல லங்காட் மாவட்ட நிலையிலான இந்த நிகழ்வுக்கு மார்ச் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பந்திங், வாட்டர் புரோண்ட் பகுதியில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

காலை ஒன்பது மணி தொடங்கி நடைபெறும் இந்த நிகழ்வில் கண்காட்சி, , உணவு விற்பனை, சுகாதாரப் பரிசோதனை, பொது கலந்துரையாடல் மற்றும் ஜெலாஜா ஏசான் ராக்யாட் மலிவு விற்பனை உள்ளிட்ட அங்கங்கள் இடம் பெறும்.

இந்த ஜெலாஜா கித்தா சிலாங்கூர் திட்டத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மாதம் 18ஆம் தேதி கிள்ளானில் தொடக்கி வைத்தார். நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு மற்றும் ரெவாங் செகம்போங் நிகழ்வு  வரும் ஏப்ரல் 28 முதல் மே 14 வரை நடைபெறும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.