SELANGOR

ரோலர் ஸ்கேட்ஸ் நடவடிக்கையில் பங்கேற்க இளம் பெண்களுக்கு அழைப்பு

2 மார்ச் 2023, 1:17 PM
ரோலர் ஸ்கேட்ஸ் நடவடிக்கையில் பங்கேற்க இளம் பெண்களுக்கு அழைப்பு

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 2: கம்போங் துங்கு தொகுதி உறுப்பினர் (ADN), மார்ச் 4 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்படும் ரோலர் ஸ்கேட்ஸ் நடவடிக்கையில் பங்கேற்க இளம் பெண்களை அழைக்கிறார்.

மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்நிகழ்வு இங்குள்ள தாமான் அமான் கூடைப் பந்து மைதானத்தில் மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் என்று லிம் யி வெய் கூறினார்.

``ஆண்களால் மட்டுமே இவ்விளையாட்டை விளையாட முடியும் என்று நினைக்கும் ஒரு சிலரின் எண்ணத்தை போக்கும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பெண்கள் பன்முகத்தன்மை கொண்டவர்கள்," என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

35 வயதிற்குட்பட்ட மற்றும் ஆர்வமுள்ள பெண்கள் https://tinyurl.com/KgTunkuSkate என்ற அகப்பக்கத்தின் மூலம் இப்போது பதிவு செய்யலாம்.

"பங்கேற்பாளர்கள் தங்கள் சொந்த ஸ்கேட்களைக் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், மேலும் விழுந்தால் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை, ஏனெனில் நாங்கள் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களை ஏற்பாடு செய்துள்ளோம்," என்று அவர் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.