SELANGOR

செலாயாங் நகராண்மைக் கழகத் துணைத் தலைவராக அடி பைசால் நியமனம்

2 மார்ச் 2023, 12:24 PM
செலாயாங் நகராண்மைக் கழகத் துணைத் தலைவராக அடி பைசால் நியமனம்

ஷா ஆலம், மார்ச் 2- நிதியமைச்சின் நாடாளுமன்றப் பிரிவு மற்றும் கண்காணிப்பு கட்டுப்பாட்டுப் பிரிவின் தலைவர் அடி பைசால் அகமது தர்மிஸி செலாயாங் நகராண்மைக் கழகத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஷா ஆலம் துணை டத்தோ பண்டாராக கடந்த ஜனவரி 9ஆம் தேதி நியமிக்கப்பட்ட இஞ்சினியர் செரேமி தர்மானுக்குப் பதிலாக அடி பைசால் நியமனம் பெற்றுள்ளார்.

பதவியேற்பு மற்றும் சத்திய பிரமாணச் சடங்கு செலயாங் நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ முகமது யாஸிட் சைர முன்னிலையில் இன்று நடைபெற்றது. நிர்வாக மற்றும் அரச தந்திர அதிகாரியான அடி பைசால் ஆசியா பல்கலைக்கழகத்தில் வர்த்தக நிர்வாகத் துறையில் இளங்கலை பட்டமும் மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வர்த்தக மேலாண்மைப் பட்டமும் பெற்றுள்ளார்.

கடந்த 2006ஆம் ஆண்டு அரசாங்கத் துறையில் இணைந்த அவர் நிதியமைச்சு உள்பட பல்வேறு அமைச்சுகளில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

கடந்த 2019இல் சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றத்தின் நிர்வாக இயக்குநராகவும் 2016 முதல் 2019 வரை கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் துணைத் தலைவராகவும் அடி பைசால் பொறுப்பு வகித்துள்ளார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.