SELANGOR

ராஜா மூடா தெங்கு அமீர் ஷா அவர்களோடு மிதிவண்டி ஓட்டும் நிகழ்ச்சி

28 பிப்ரவரி 2023, 9:31 AM
ராஜா மூடா தெங்கு அமீர் ஷா அவர்களோடு மிதிவண்டி ஓட்டும் நிகழ்ச்சி

ஷா ஆலம், பிப் 28: ராஜா மூடா தெங்கு அமீர் ஷா அவர்களோடு மெதுவாக மிதிவண்டி ஓட்டும் நிகழ்ச்சி அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மார்ச் 12ஆம் தேதி நடைபெறவிருந்த அந்த நிகழ்வு மார்ச் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கிள்ளான் மாநகராட்சியின் (எம்பிகே) தலைவர் தெரிவித்தார்.

"இந்த முறை வடக்கு கிள்ளான் மற்றும் தெற்கு கிள்ளான் மாவட்டங்கள் வழியாக மேற்கொள்ளப்படும் இந் நடவடிக்கையின் தூரம் 50 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

"மிதிவண்டி ஓட்டும் இந்நிகழ்வில் 1,000 பங்கேற்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என நோரைனி ரோஸ்லான் கூறினார்.

இந்த நிகழ்ச்சி பண்டார் புக்கிட் ராஜாவில் உள்ள சைம் டார்பி விற்பனைக் காட்சியகத்தில் காலை 7 மணிக்குத் தொடங்கும் என்று அவர் மேலும் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.