SELANGOR

புக்கிட் கெம்பாராவைச் சுற்றுலா மையமாக எண்ணம்

27 பிப்ரவரி 2023, 9:11 AM
புக்கிட் கெம்பாராவைச் சுற்றுலா மையமாக எண்ணம்

ஷா ஆலம், பிப் 27: காடுகள் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் மலை ஏறுதல் போன்றவற்றில் ஈடுபாடு உள்ளவர்கள் விரும்பும் இடமாக புக்கிட் கெம்பாரா, அம்பாங் திகழ்கிறது. அதனால், அவ்விடம் ஒரு புதிய சுற்றுலாத் தலமாக உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகளை கொண்டுள்ளது.

எனவே, அந்த இடத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் தெரிவித்தார்.

``அவ்விடத்தை சுற்றியுள்ள குடியிருப்பாளர்களிடமிருந்து எங்களுக்குச் சில கருத்துகளும் கிடைத்தன. சுற்றுலா தளமாக மாற்ற புக்கிட் கெம்பராவின் சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதை நாங்கள் காண்கிறோம். எனவே அங்கு பொது சுற்றுலா மையம் அமைப்பதற்கு பொருத்தமான இடத்தை அடையாளம் காண ஒரு திட்டத்தை நாங்கள் விவாதிப்போம்," என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.