SELANGOR

பாயா ஜெராஸ் இந்தியச் சமூகத் தலைவரின் ஏற்பாட்டில் மாணவர்களுக்குச் சீருடைகள் விநியோகம்

27 பிப்ரவரி 2023, 7:45 AM
பாயா ஜெராஸ் இந்தியச் சமூகத் தலைவரின் ஏற்பாட்டில் மாணவர்களுக்குச் சீருடைகள் விநியோகம்

சுங்கை பூலோ, பிப் 27- மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் திட்டத்தின் கீழ் வசதி குறைந்த மாணவர்களுக்குப் பள்ளிச் சீருடை மற்றும் காலணிகள் வழங்கும் நிகழ்வு சுங்கை பூலோ மாத்தாங் ஜெயாவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

பாயா ஜெராஸ் இந்தியச் சமூகத் தலைவர் திருமதி கே. மகேஸ்வரியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ், தேசிய மற்றும் பாலர் பள்ளிகளில் பயிலும் 46 மாணவர்களுக்குப் பள்ளிச் சீருடைகள் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் குவாங் தமிழ்ப்பள்ளி, சுங்கை பூலோ சரஸ்வதி தமிழ்ப்பள்ளி, தேசியப் பள்ளி மற்றும் பாலர் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டதாகத் திருமதி சரஸ்வதி கூறினார்.

கிராமத் தலைவருக்கான நிதி ஒதுக்கீட்டில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வுக்கு ஏறக்குறைய 5,000 வெள்ளி வரை செலவு பிடித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.