SELANGOR

அபராதங்கள் 80 சதவீதம் வரை குறைப்பு - அம்பாங் ஜெயா மாநகராட்சி

24 பிப்ரவரி 2023, 8:07 AM
அபராதங்கள் 80 சதவீதம் வரை குறைப்பு - அம்பாங் ஜெயா மாநகராட்சி

ஷா ஆலம், பிப் 24: அம்பாங் ஜெயா மாநகராட்சி (எம்பிஏஜே) நாளை கோம்பாக் மாவட்டத்தில் நடைபெறும் ஜெலாஜா கித்தா சிலாங்கூர் பென்யாயாங் (ஜேகேஎஸ்பி) திட்டத்துடன் இணைந்து அபராதங்களை 80 சதவீதம் வரை குறைக்கும் வாய்ப்பை வழங்குகிறது.

தாமான் மலவதியில் உள்ள பஜார் ரம்லான் தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் கவுண்டரில் பணம் செலுத்தலாம் என்று உள்ளாட்சி அதிகார (பிபிடி) மக்கள் தொடர்பு மற்றும் செயலகப் பிரிவு தெரிவித்துள்ளது.

"இலவச சுகாதாரப் பரிசோதனைகள், உணவு வாகனங்கள் மற்றும் மாநில அரசின் திட்டங்களைப் பரப்பும் தகவல் சேனலாகச் சம்பந்தப்பட்ட ஏஜென்சிகளின் கண்காட்சிகள் ஆகியவற்றுடன் இந்த மலிவு விற்பனை நடைபெறும்," என்று அவர் கூறினார்.

RM800 மதிப்பிலான மொத்த ரொக்கப் பரிசு வழங்கும் 6 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான வண்ணத் தீட்டும் போட்டியும் நடைபெறும். இதில் பங்கெடுக்க https://forms.gle/ifDj69QbhPJCSrL69 மூலம் பதிவுசெய்து கொள்ளலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.