SELANGOR

ஜெலாஜா ஏசான் ரக்யாட் நிகழ்வில் அக்ரோசெல் குறைந்த விலையில் பொருட்களை விற்கிறது

24 பிப்ரவரி 2023, 5:25 AM
ஜெலாஜா ஏசான் ரக்யாட் நிகழ்வில் அக்ரோசெல் குறைந்த விலையில் பொருட்களை விற்கிறது

செராஸ், பிப் 24: பண்டான் இண்டா, தெரத்தாய் மற்றும் சுங்கை ராமால் ஆகிய தொகுதிகளில் நடைபெறும் மலிவு விற்பனையில் பெர்துபுஹான் அக்ரோபிரெனுயர் சிலாங்கூர் (அக்ரோசெல்) குறைந்த விலையில் அதாவது RM1 முதல் RM5 வரை பொருட்களை விற்கிறது.

பிஸ்கட், கோழி பொறிக்கும் மாவு, பல்வேறு மசாலாப் பொருட்கள், சோயா சாஸ், பல்வேறு சாஸ்கள், தண்ணீர் போத்தல் பெட்டிகள் மற்றும் ரொட்டி ஆகிய பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்று அக்ரோசெல் எஸ்கோ முகமட் அரிஸ் இஸ்மாயில் கூறினார்.

மலிவு விற்பனைக்கு வருகை புரியும் பொதுமக்களின் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் இக்கடை திறக்கப்பட்டுள்ளது.

விவசாயம் எஸ்கோ இர் இஷாம் அசிம் அவர்களின் முழு ஆதரவு பெற்ற இத்திட்டம் எதிர்காலத்தில் விற்பனைப் பொருட்களைப் பல்வகைப் படுத்தும் என முகமட் அரிஸ் கூறினார்.

இதன்பிறகு, பிரபல உலர் உணவு உற்பத்தியாளர்களை எங்களுடன் சேர்ந்து விற்பனை செய்ய அழைக்கத் திட்டமிட்டுள்ளோம் என்று மேலும் கூறினார்

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.