SELANGOR

கடந்த ஆண்டு முழுவதும் 1,045 அபராதங்கள் வர்த்தகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது - சுபாங் ஜெயா மாநகராட்சி

24 பிப்ரவரி 2023, 3:17 AM
கடந்த ஆண்டு முழுவதும் 1,045 அபராதங்கள் வர்த்தகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது - சுபாங் ஜெயா மாநகராட்சி

ஷா ஆலம், பிப் 24: சுபாங் ஜெயா மாநகராட்சி (எம்.பி.எஸ்.ஜே) கடந்த ஆண்டு முழுவதும் RM625,840 அபராதத் தொகையை உள்ளடக்கிய 1,045 அபராதங்களை பல குற்றங்களுக்காக வர்த்தகர்களுக்கு வழங்கியுள்ளது.

சுபாங் ஜெயா துணை மேயர் முகமட் சுல்குர்னைன் சே அலி கூறுகையில், சாலையோரக் கடைகளை நடத்திய குற்றத்துக்காகவும், பொது இடங்களில் தடைகளை ஏற்படுத்தியதற்காகவும் மொத்தம் 537 வழக்குகளும், உரிமம் இல்லாமல் செயல்படும் கடைகள் மீது 272 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

"மேலும், உரிமம் இல்லாமல் விளம்பரங்களைக் காட்சிப்படுத்திய குற்றத்திற்காக மொத்தம் 192 வழக்குகளும், தடை செய்யப்பட்ட நேரங்கள் மற்றும் பகுதிகளில் கனரக வாகனங்களை ஓட்டியதற்கு 35 வழக்குகளும், சட்டவிரோதமாகக் குப்பைகளைக் கொட்டியதற்காக 7 வழக்குகளும், உரிமம் இல்லாமல் செயல்படும் பொழுதுபோக்கு மையங்கள் மீது இரண்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன,`` என்று தெரிவித்தார்.

"சுபாங் ஜெயா மாநகராட்சி இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொள்கிறது மற்றும் இன்னும் சட்டத்திற்கு இணங்க தவறும் நபர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கத் தயங்குவதில்லை," என்று அவர் நேற்று உள்ளாட்சி மன்றத்தின் மாதாந்திர கூட்டத்தில் கூறினார்.

முகமட் சுல்குர்னைன், சாலையோரம் அல்லது வாகன நிறுத்துமிடங்களில் வியாபாரம் செய்யும் வணிகர்களை உடனடியாக நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார். ஏனெனில் இது வாடிக்கையாளர்களுக்கும் சாலைப் பயனாளர்களுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

மேலும், நகரை சுற்றி நடக்கும் சட்ட விரோதச் செயல்கள் குறித்து புகார் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.