ஷா ஆலம், பிப் 24: சிலாங்கூர் பல்கலைக்கழகம் (Unisel) இந்த ஆண்டு ஏப்ரலில் பதியும் புதிய மாணவர்களுக்கு அனைத்து அடிப்படை பாடத்திட்டங்களுக்கும் RM12,000 வரை இலவசக் கல்விக் கட்டணத்தை வழங்குகிறது.
இன்று முதல் http://apply.unisel.edu.my என்ற இணைத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று முகநூல் வழி யூனிசெல் தெரிவித்துள்ளது.
"இங்கே அடிப்படை திட்டத்திற்கான கல்வி காலம் ஒரு வருடம் மட்டுமே. இது மூன்று தவணைகளை உள்ளடக்கியுள்ளது. மேலும், பல்கலைக்கழக வளாகம் பாதுகாப்பு மற்றும் வசதி நிறைந்தவை ஆகும்
"மாணவர்கள் தங்கும் விடுதிக்கு மட்டும் RM200 கட்டணம் செலுத்த வேண்டும்," என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்திற்கான பதிவு நாள் 6 ஏப்ரல் 2023 ஆகும். ஏதேனும் கேள்விகள் மற்றும் கூடுதல் தகவலுக்கு, யூனிசெல் அலுவலகத்தை 03-55223400 என்ற எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளவும்.
வழங்கப்படும் அடிப்படை பாடத்திட்டங்கள் இங்கே:
• தகவல் தொழில்நுட்ப திட்டம்
• மேலாண்மை திட்டம்
• அறிவியல் திட்டம்
• இளங்கலை கல்வி திட்டம் (ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கற்பித்தல்)
• இலக்கியத் திட்டம்
• ஹஃப்பாஸ் ட்ராக் (Trek Huffaz) இலக்கியத் திட்டம்
•ஹஃப்பாஸ் ட்ராக் அறிவியல் திட்டம்
• ஹஃப்பாஸ் ட்ராக் மேலாண்மை திட்டம்
•ஹஃப்பாஸ் ட்ராக் தகவல் தொழில்நுட்ப திட்டம்
•ஹஃப்பாஸ் ட்ராக் இளங்கலை கல்வி திட்டம்








