SELANGOR

மலிவு விற்பனையில் கலந்து கொள்ள இல்லத்தரசி ஒருவர் 30 நிமிடங்கள் பயணம் செய்துள்ளார்

23 பிப்ரவரி 2023, 12:05 PM
மலிவு விற்பனையில் கலந்து கொள்ள இல்லத்தரசி ஒருவர் 30 நிமிடங்கள் பயணம் செய்துள்ளார்

சுபாங் ஜெயா, பிப் 23: இன்று கின்றாரா தொகுதியில் நடைபெற்ற மலிவு விற்பனையில் பொருட்களை வாங்க இல்லத்தரசி ஒருவர் 30 நிமிடங்கள் பயணம் செய்துள்ளதாகக் கூறினார்.

"நான் தாமான் மாவார் கின்ராராவில் வசிக்கிறேன். விற்பனை நடக்கும் இடத்திலிருந்து வெகு தொலைவில் இல்லை, ஆனால் சாலை நெரிசலால் இவ்விடத்தை அடைய 30 நிமிடங்கள் தேவைப்படும் எனத் தெரிவித்தார் ஆர்.பத்மனி (63).

"இருப்பினும், நானும் என்னுடைய மூன்று அண்டை வீட்டார்களும் ஒரே வாகனத்தில் பயணித்து இங்கு வந்தோம். ஏனெனில் இது வசதி குறைந்தவர்களுக்கு உதவும் வகையில் மாநில அரசு வழங்கிய ஒரு நல்ல திட்டம் ஆகும்" என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், 64 வயதான சான் மேய் யோங், தான் முதல் முறையாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும், வரிசையில் பலர் காத்திருந்தாலும் பொருட்கள் மிகவும் மலிவாக விற்கப்பட்டதால் மிகவும் உற்சாகமாக இருப்பதாகவும் கூறினார்.

சந்தையுடன் ஒப்பிடும் போது இங்கு பொருட்களின் விலை மிகவும் மலிவாக இருப்பதால் செலவுகளை மிச்சப்படுத்தலாம். அதனால், இந்த திட்டத்தைத் தொடர வேண்டும், என்றார்.

பொதுமக்கள் அவ்வப்போது விற்பனை இடங்களைப் பற்றி அறிய http://linktr.ee/myPKPS என்ற இணைப்பைப் பார்வையிடலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.