SELANGOR

மலிவு விற்பனையில் சிறு வியாபாரிகள் வணிகம் செய்ய வாய்ப்பு

23 பிப்ரவரி 2023, 8:53 AM
மலிவு விற்பனையில் சிறு வியாபாரிகள் வணிகம் செய்ய வாய்ப்பு

கோம்பாக், பிப் 23: குவாங் தொகுதியில் நேற்று நடைபெற்ற மலிவு விற்பனையில் வாழைப்பழங்கள், அன்னாசிப்பழங்கள் மற்றும் சோளங்கள் போன்றவற்றை விற்கும் சிறு வியாபாரிகள் வணிகம் செய்வதற்கான வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி தெரிவித்தனர்.

60 வயதான வான் ரஹிமா வான் மஹ்மூட், மக்கள் தொகை அதிகம் உள்ள இவ்விடத்தில் வியாபாரம் செய்வது தனது வருமானத்தை அதிகரிக்க உதவுவதாகவும், அடுத்த மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என நம்புவதாகவும் கூறினார்.

"மலிவு விற்பனை திட்டத்தில் வணிகம் செய்ய எனக்கு வாய்ப்பளித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த திட்டத்தில் பங்கேற்பது இது இரண்டாவது முறையாகும். இது உண்மையில் ஒரு சிறந்த நிகழ்வாகும்,`` என்றார்.

``மேலும் பலர் மலிவு விற்பனையில் உள்ள பொருட்களை வாங்குவதற்கு காத்திருக்கும் போது என்னுடைய பொருள்களையும் வாங்குகிறார்கள். நேற்று நான் RM400 சம்பாதித்தேன் ஆனால் இன்னும் மூலதனத்தைக் கழிக்கவில்லை,`` என்று மேலும் கூறினார்.

நான் இரவு சந்தையில் மட்டுமே வியாபாரம் செய்கிறேன். இதுபோன்ற ஒரு வாய்ப்பு கிடைத்தால், அது வருமானத்தை அதிகரிக்க உதவுகிறது, ”என்று இரண்டு ஆண்டுகளாக வணிகம் செய்து வரும் ரஹிமா கூறினார்.

சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழக நிர்வாகத்துடன் மலிவு விற்பனை மேலாளர் கலந்து பேசி, குவாங் தொகுதி ஒருங்கிணைப்பாளரிடம் இருந்து அவருக்கு வணிகம் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.