SELANGOR

சிலாங்கூரில் நதிகள் பாதுகாப்புத் திட்டத்துக்காக 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது

23 பிப்ரவரி 2023, 7:56 AM
சிலாங்கூரில் நதிகள் பாதுகாப்புத் திட்டத்துக்காக 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது

ஷா ஆலம், பிப் 23: கடந்த ஆண்டு சிலாங்கூரில் நதிகள் பாதுகாப்புத் திட்டத்துக்காக மொத்தம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது என்று இயற்கை வள அமைச்சர் கூறினார்.

12வது மலேசியா திட்டத்தின் கீழ் இந்த தொகையானது மாநிலத்தில் வெள்ள அபாயத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று நிக் நஸ்மி நிக் அமாட் கூறினார்.

சிலாங்கூர் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை (JPS), மேரு, செமந்தா மற்றும் செலாட் கிள்ளான் தொகுதிகளில் ஐந்து குறுகிய காலத் தணிப்பு திட்டங்களைச் செயல்படுத்த கிட்டத்தட்ட RM1.4 மில்லியன் செலவிட்டதாக அவர் விளக்கினார்.

"ஜேபிஎஸ், சுங்கை காப்பார் கெச்சில் மற்றும் சுங்கை காப்பார் பெசாரில் வெள்ளத் தணிப்பு திட்டங்களை மத்திய முகமையின் ஒப்புதலுக்கு உட்பட்டு செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

"காப்பாரில் இந்த வெள்ளத் தணிப்புத் திட்டத்தின் நோக்கம் நீர் பிடிப்பு குளம் அமைப்பதை உள்ளடக்கியது. இந்தத் திட்டத்தால் வெள்ளப் பிரச்சனையை ஒட்டுமொத்தமாகச் சமாளிக்க முடியும் என்று நம்புகிறோம்” என இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நான்கு வெள்ளத் தணிப்புத் திட்டங்களைச் செயல்படுத்த மாநில அரசு மொத்தம் RM67.5 மில்லியனை ஜேபிஎஸ்க்கு வழங்கியுள்ளதாகச் செத்தியவங்சா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.

இதற்கிடையில், நிக் நஸ்மி கூறுகையில், ஜேபிஎஸ் நில அரிப்பு கட்டுப்பாட்டு திட்டத்தையும் செயல்படுத்தியது மற்றும் கடல் நீர் பெருக்குதல் பிரச்சனையை சமாளிக்க சுங்கை காஜாங், தஞ்சோங் கராங்கில் அணையையும் வழுப்படுத்தியது எனக் குறிப்பிட்டார்.

"இந்த திட்டத்தில் கட்டுமானப் பணிகள் மற்றும் இரண்டு கிலோமீட்டர் பான் கடற்கரையை உயர்த்துவது ஆகியவை அடங்கும். இது இப்போது வடிவமைப்பை முடிவு செய்யும் இறுதி கட்டத்தில் உள்ளது மற்றும் இந்த ஜூலை மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது," என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.