SELANGOR

கிள்ளான் நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள சாலை சேதங்களைச் சரி செய்ய RM26 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு

23 பிப்ரவரி 2023, 7:43 AM
கிள்ளான் நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள சாலை சேதங்களைச் சரி செய்ய RM26 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு

ஷா ஆலம்,  பிப் 23: கிள்ளான் நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள சாலை சேதங்களைச் சரி செய்ய இந்த ஆண்டு RM26 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாகப் பொதுப்பணித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

"நிதி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒதுக்கீட்டின் ஒட்டுமொத்த மதிப்பிற்கு உட்பட்டு இந்தப் பணி மேற்கொள்ளப்படும்,`` என்றார் டத்தோ ஶ்ரீ அலெக்சாண்டர் நத்தா லிங்கி.

"கூட்டரசு சாலை சேதத்தின் அளவை பகுப்பாய்வு செய்வதன் அடிப்படையில் பழுதுபார்ப்பு களின் முன்னுரிமை பட்டியல் அமையும்" என்று அவர் இன்று பாராளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார்.

"அந்த தொகையில், RM 11.6 மில்லியன் சாலை செப்பனிடும் பணிக்கும்,  செப்பனிடுதல்  தவிர்த்து இதரப் பணிகளுக்கு, RM323,000  மற்றும் , RM1.7 மில்லியன் வழக்கமான பராமரிப்புகாகவும்" வழங்கப்பட்டதாக  அவர் கூறினார்.

முன்னதாகக், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ், முக்கிய சாலைகள் அமைப்பதற்கான தார் தரத்தை மேம்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்டார்.

மாவட்டத்தில் சாலைகளைச் சரிசெய்யும் பணிகளுக்காகக் கடந்த வருடம் 13 மில்லியன் ரிங்கிட் களுக்கு மேல் அனுமதி வழங்கப்பட்டதாகவும் கபிட் நாடாளுமன்ற உறுப்பினர் விளக்கமளித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.