கோலாலம்பூர், பிப் 23 - குடி நீர் கட்டணப் பாக்கி செலுத்தப்படாததால் நீர்விநியோகம் துண்டிக்கப்பட்டப் பிரச்சனைக்குச் சிறந்த தீர்வைக் குறித்து ஆலோசிக்க, தொலைத்தொடர்பு மற்றும் இலக்கவியல் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில் பென்குருசான் ஆயர் சிலாங்கூர் சென். பென்ஹாட் மற்றும் புத்ரா ரியா அபார்ட்மென்ட் தரப்பினருடன் நாளை சந்திப்பு நடத்தவிருக்கிறார்.
ஆயர் சிலாங்கூர் நிறுவனத்திற்குத் தண்ணீர்க் கட்டணமாக 170,000 வெள்ளியைச் செலுத்தாததால் இந்த பிரச்சனை எழுந்ததாக லெம்பா பந்தாய் நாடாளுமன்ற
உறுப்பினருமான அவர் கூறினார்.
மொத்தம் 358 குடியிருப்புகள் (54.2 சதவீதம்) பராமரிப்புக் கட்டணமாக 24.7 லட்சம் வெள்ளியைச் (சராசரி வெ.6,899) செலுத்த வேண்டியுள்ளது.
நிர்வாகத்தினரால் பலமுறை நினைவூட்டப்பட்ட போதிலும் பல குடியிருப்பாளர்கள்
தங்கள் மாதாந்திர பராமரிப்பு கட்டணங்களைச் செலுத்துவதில்லை என்று அவர் கூறினார்.
குடியிருப்பாளர்களுடனான இந்தச் சந்திப்பில் தாமும் கலந்து கொள்ளவிருப்பதாகவும்
அவர் தெரிவித்தார். இதற்கிடையில், நேற்றிரவு அடுக்குமாடி குடியிருப்புக்குத் தண்ணீர் விநியோகத்தைத் தற்காலிகமாக இணைக்க ஆயர் சிலாங்கூர் ஒப்புக்கொண்டதாகவும்
அவர் கூறினார்.
- பெர்னாமா
SELANGOR
கட்டணம் செலுத்தாததால் நீர் விநியோகம் துண்டிப்பு- ஆயர் சிலாங்கூர் நிறுவனத்துடன் ஃபாஹ்மி ஃபாட்சில் சந்திப்பு
23 பிப்ரவரி 2023, 4:04 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
ஜோஹான் செத்தியாவில் மோசமடைந்தது காற்றின் தரம்
Media Selangor Team
13 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூரின் மூன்று ஊராட்சி அமைப்புகளுக்கு தேசிய அளவில் அங்கீகாரம்
Media Selangor Team
13 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூரில் காற்றுத் தரம் மேம்பட்டுள்ளது
Media Selangor Team
13 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூர் அரையாண்டு முதலீட்டு மதிப்பு RM70 பில்லியன்; சேவை, உற்பத்தித் துறைகள் முக்கிய பங்கு
Bernama
12 செப்டெம்பர் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



