SELANGOR

எதிர்வரும் சனிக்கிழமை நடமாடும் கவுண்டர் சேவை செயல்படும் - ஷா ஆலம் மாநகராட்சி

23 பிப்ரவரி 2023, 3:56 AM
எதிர்வரும் சனிக்கிழமை நடமாடும் கவுண்டர் சேவை செயல்படும் - ஷா ஆலம் மாநகராட்சி

ஷா ஆலம், பிப் 23: ஷா ஆலம் மாநகராட்சியின் (எம்பிஎஸ்ஏ) நடமாடும் கவுண்டர் சேவை, லோட்டஸ் செத்தியா ஆலமின் வாகனம் நிறுத்தும் இடம், செக்‌ஷன் U13இல் இந்த சனிக்கிழமை செயல்படும்.

காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை இச்சேவை வழங்கப்படும் என்று அதன் கார்ப்பரேட் மற்றும் மக்கள் தொடர்புப் பிரிவின் தலைவர் கூறினார்.

"இந்த நடமாடும் கவுண்டர் மதிப்பீட்டு வரியைச் சரிபார்த்தல் மற்றும் செலுத்துதல், வாகனம் நிறுத்தும் தொடர்பான அபராதத்தை சரி பார்த்தல் மற்றும் செலுத்துதல், புகார் கவுண்டர் மற்றும் பல சேவைகளை வழங்குகிறது" என்று ஷாரின் அகமது ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் சமூகத்தின் நலனுக்காக ஷா ஆலம் நகராட்சி கழகத்தின் சேவை முறையை மேலும் வலுப்படுத்த முடியும் என நம்பப்படுகிறது என்றார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.