SELANGOR

ஸ்கிம் மெஸ்ர உசிய எமாஸ் திட்டத்தின் (SMUE) கீழ் 3,800க்கும் மேற்பட்ட ஜோம் ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கப்பட்டன - பண்டார் உத்தாமா மாநிலச் சட்டமன்றம்

23 பிப்ரவரி 2023, 3:53 AM
ஸ்கிம் மெஸ்ர உசிய எமாஸ் திட்டத்தின் (SMUE) கீழ் 3,800க்கும் மேற்பட்ட ஜோம் ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கப்பட்டன - பண்டார் உத்தாமா மாநிலச் சட்டமன்றம்

பெட்டாலிங் ஜெயா, பிப் 23: பண்டார் உத்தாமா மாநிலச் சட்டமன்ற தொகுதி ஸ்கிம் மெஸ்ர உசிய எமாஸ் திட்டத்தின் (SMUE) கீழ் 3,800க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஜோம் ஷாப்பிங் வவுச்சர்களைப் பெற்றுள்ளனர்.

இத்திட்டத்திற்கு 2,000க்கும் மேற்பட்ட புதிய விண்ணப்பங்கள் கிடைத்ததாகவும், 3,800 ஜோம் ஷாப்பிங் வவுச்சர்கள் ஏற்கனவே உறுப்பினர்களால் பெற்று கொள்ளப் பட்டதாகவும் ஒருங்கிணைப்பு அதிகாரி கூறினார்.

"குடியிருப்பாளர்களுக்கு உதவக்கூடிய பிங்காஸ் உதவித் திட்டம்,  ஸ்கிம் மெஸ்ர உசிய எமாஸ் மற்றும் இன்சான் (சிலாங்கூர் பொதுக் காப்பீட்டுத் திட்டம்) போன்றவற்றை நாங்கள் மக்கள் நலனுக்காக பயன்படுத்திக் கொள்கிறோம்" என்று ஹனிஸ் முகமட் கூறினார்.

ஹனிஸின் கூற்றுப்படி, அவரது தரப்பு மாநில அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் திட்டங்களைக் குறிப்பாகக் குறைந்த வருமானம் பெறும் தரப்பினரை (B40) இலக்காகக் கொண்ட திட்டங்களைத் தீவிரமாக ஊக்குவித்து வருகிறது,

"மேலும், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களை அடையாளம் காண நாங்கள் பள்ளியுடன் தொடர்பு கொள்கிறோம், இதன் மூலம் நாங்கள் பொருத்தமான திட்டங்கள் மற்றும் உதவிகளை ஒருங்கிணைக்க முடியும்," என்று அவர் மேலும் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.