SELANGOR

12 வயதுக்கும் கீழ்ப்பட்ட மாணவர்களுக்கான கால்பந்துப் போட்டி- ஹைலண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி வெற்றி

22 பிப்ரவரி 2023, 8:27 AM
12 வயதுக்கும் கீழ்ப்பட்ட மாணவர்களுக்கான கால்பந்துப் போட்டி- ஹைலண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி வெற்றி
12 வயதுக்கும் கீழ்ப்பட்ட மாணவர்களுக்கான கால்பந்துப் போட்டி- ஹைலண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி வெற்றி

கிள்ளான், பிப் 22- பன்னிரண்டு வயதுக்கும் கீழ்ப்பட்ட மாணவர்களுக்கான ஒன்பதின்மர் கால்பந்துப் போட்டி கடந்த வாரம் இங்கு நடைபெற்றது.

தாமான் செந்தோசா தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் சிலாங்கூர் இந்தியச் சமூகத் தலைவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஐந்து பள்ளிகளைச் சேர்ந்த எட்டு குழுக்கள் கலந்து கொண்டன.

வலம்புரோசா, சிம்பாங் லீமா, ஹைலண்ட்ஸ், மெதடிஸ்ட் காப்பார், தாமான் செந்தோசா ஆகியவையே இப்போட்டியில் பங்கு கொண்ட பள்ளிகளாகும்.

இப்போட்டியில் கிள்ளான், ஹைலண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி முதல் இடத்தைப் பிடித்த வேளையில் தாமான் செந்தோசா தமிழ்ப்பள்ளி இரண்டாம் இடத்தையும் மெதடிஸ்ட் காப்பார் பள்ளி மூன்றாம் இடத்தையும் பிடித்தன.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும் இந்தியச் சமூகத்திற்கான மந்திரி புசாரின் சிறப்பு பிரதிநிதியுமான டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் இந்த விளையாட்டுப் போட்டிக்குத் தலைமையேற்று வெற்றியாளர்களுக்குப் பரிசுகளை எடுத்து வழங்கினார்.

கால்பந்துப் போட்டியில் சிறந்து விளங்கும் இளம் விளையாட்டாளர்களை அடையாளம் காணவும் இளையோர் மத்தியில் விளையாட்டு மீதான ஆர்வத்தை ஏற்படுத்தவும் இப்போட்டி நடத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.