ஷா ஆலம், பிப் 21: செந்தோசா சட்டமன்றத்தைச் (DUN) சுற்றியுள்ள முதியவர்கள் உட்பட மொத்தம் 37 குறைந்த வருமானம் கொண்ட குடியிருப்பாளர்கள் (B40) இலவச மூக்கு கண்ணாடிகளைப் பெற்றனர்.
செந்தோசாவில் உள்ள VO ஆப்டிக்ஸில், கண்ணாடிகளை வழங்கியதோடு, குடியிருப்பாளர்களுக்கு இலவசக் கண் பரிசோதனை சேவையும் வழங்கப்பட்டது என்று சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி குணராஜா கூறினார்.
"செந்தோசா மாநிலச் சட்டமன்ற சேவை மையத்தில் பதிவு செய்த B40 குழு மற்றும் முதியோர்களுக்காக இலவச மூக்கு கண்ணாடி வழங்கும் இத்திட்டம் நான்காவது முறையாக நடைபெறுகிறது" என்று அவர் முகநூல் மூலம் தெரிவித்தார்.
இந்நிகழ்வைச் செந்தோசா சிலாங்கூர் சமூகச் சுகாதாரத் தன்னார்வாளர்கள் (SUKA) VO ஆப்டிக்ஸ் மற்றும் கிளாரன்ஸ் குடும்பத்துடன் இணைந்து நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியை வெற்றியடையச் செய்த நிகழ்ச்சி இயக்குனரான திருமதி அனேதாவுக்கும் மற்றும் சுக்கா செந்தோசா குழுவினருக்கும் நன்றி தெரிவித்தார் டாக்டர் ஜி குணராஜா.








