SELANGOR

புற்றுநோய் பரிசோதனை திட்டம் - பெட்டாலிங் ஜெயா நகராட்சி கழகம்

19 பிப்ரவரி 2023, 9:46 AM
புற்றுநோய் பரிசோதனை திட்டம் - பெட்டாலிங் ஜெயா நகராட்சி கழகம்

ஷா ஆலம், பிப் 19: பெட்டாலிங் ஜெயா நகராட்சி கழகம் (எம்பிபிஜே) சஹாபத் மோட்டார் எம்பிபிஜே ஹார்லி ஓனர் குரூப் பெட்டாலிங் ஜெயாவுடன் இணைந்து புற்றுநோய் பரிசோதனை திட்டத்தை ஏற்பாடு செய்கிறது.

பிப்ரவரி 26 அன்று பெட்டாலிங் ஜெயா நகராட்சி கழக வளாகத்தில் பெட்டாலிங் ஜெயா  ஜெலாஜா புற்றுநோய் #66 நிகழ்வைப் பார்வையிட பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள். இந்நிகழ்வில் பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

"மலேசியத் தேசிய புற்றுநோய் சங்கம், இலவச புற்றுநோய் பரிசோதனை ஏற்பாடு செய்துள்ளதால் இந்நிகழ்வில் கலந்து கொள்ள மக்கள் அழைக்கப்படுகிறார்கள்.

"இதற்கிடையில், துன் ஹுசைன் ஓன் மருத்துவமனை கண் பரிசோதனை சேவையை வழங்கும், `KPJ` இரத்த சர்க்கரை அளவை பரிசோதிக்கும் மற்றும் நெஸ்லே ``கொலஸ்ட்ரால்`` பரிசோதனையை வழங்கும்" என்று பெட்டாலிங் ஜெயா நகராட்சி கழகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிள் அக்ரோபாட்டிக்ஸ் படைப்பு மற்றும் அதிக சக்தி கொண்ட மோட்டார் சைக்கிள் கண்காட்சி ஆகியவையும் இந்த நிகழ்வில் இடம்பெறும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.