கிள்ளான், பிப் 19: கம்போங் சுங்கை உடாங்கில் உள்ள ஃபுட்சல் திடலின் வசதியை மேம்படுத்த மாநில அரசு RM39,000-க்கு மேல் ஒதுக்கீடு செய்துள்ளது.
டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, விளையாட்டு வசதிகளை மேம்படுத்தும் பணி சிலாங்கூர் பென்யாங் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாகும் என்றார்.
"சிலாங்கூர் பென்யாங் திட்டத்திற்காக சுமார் RM500,000 ஒதுக்கப்படுகிறது. இது ஒவ்வொரு மாநிலச் சட்டமன்றத்திற்கும் (DUN) மக்களுக்கு வசதிகளை மேம்படுத்த அல்லது ஏற்படுத்தி தருவதற்காக அரசு வழங்கியுள்ளது.
“இந்த ஃபுட்சல் திடலைச் சுற்றுவட்டார குடியிருப்பாளர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்," என அதை அதிகாரப்பூர்வமாகத் திறந்த வைத்த பின் கூறினார்.
அத்திடலின் மேம்பாட்டு பணி நவம்பர் 1 ஆம் தேதி தொடங்கி பின் ஒரு மாதம் கழித்து டிசம்பர் 2 ஆம் தேதி நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.








