SELANGOR

மூன்று மாதக் காலம்,  மாற்று தடங்களை ஊக்குவிக்க  சில சாலைகள் மூடப்படும் -  பெட்டாலிங் ஜெயா நகராட்சி கழகம்

19 பிப்ரவரி 2023, 3:22 AM
மூன்று மாதக் காலம்,  மாற்று தடங்களை ஊக்குவிக்க  சில சாலைகள் மூடப்படும் -  பெட்டாலிங் ஜெயா நகராட்சி கழகம்

ஷா ஆலம், பிப் 19: பெட்டாலிங் ஜெயா நகராட்சி கழகம் (MBPJ) மார்ச் 1 முதல் கொன்த்ரா (kontra) வழிகளைப் பயன்படுத்த ஊக்குவிக்கிறது. இதற்கு ஏற்ப  பல சாலைகள் மற்றும் சந்திப்புகளை மூடும்.

மூன்று மாதக் காலம் இச்சாலை மூடல் (சோதனை காலம்) நடவடிக்கை செயல்படும். சனி, ஞாயிறு, பொது விடுமுறை மற்றும் மழை பெய்யும் நேரம் தவிர ஒவ்வொரு நாளும் மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை சாலைகள் மூடப்படும்.

அச்சாலைகள் ஜாலான் ஓத்மான்-ஜாலான் டெம்ளர் சந்திப்பு, ஜாலான் காசிங்-ஜாலான் டெம்ளர் சந்திப்பு, ஜாலான் டெம்ளர்-ஜாலான் 6/29 சந்திப்பு மற்றும் ஜாலான் டெம்ளரின் இடைநிலை சாலைகள் ஆகியவை ஆகும் எனப் பெட்டாலிங் ஜெயா நகராட்சி கழகத்தின் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் யூனிட் மீடியா செயலகம் தெரிவித்தது.

"சாலையைப் பயன்படுத்துபவர்கள் கவனமாக வாகனம் ஓட்டவும், அச்சாலைகள் நெடுகிலும்  உள்ள அறிவிப்பு பலகையைக் கடைப்பிடித்து மாற்று தடங்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.

"ஏதேனும் கேள்விகள் மற்றும் கூடுதல் தகவல்களுக்கு போக்குவரத்து பிரிவு, பெட்டாலிங் ஜெயா நகராட்சி கழகப் பொறியியல் துறையை 03-79584221 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது japatankejuruteraan@mbpj.gov.my என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.