SELANGOR

குறைந்த விலை அடுக்குமாடி குடியிருப்புகளின் வசதிகளை மேம்படுத்த மாநில அரசு ஒதுக்கீடு கோருகிறது

19 பிப்ரவரி 2023, 3:20 AM
குறைந்த விலை அடுக்குமாடி குடியிருப்புகளின் வசதிகளை மேம்படுத்த மாநில அரசு ஒதுக்கீடு கோருகிறது

கிள்ளான், பிப் 19: சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள குறைந்த விலை அடுக்குமாடி குடியிருப்புகளின் வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை சீரமைக்க மாநில அரசு மத்திய அரசிடமிருந்து ஒதுக்கீடு கோருகிறது.

பெரும்பாலான குடியிருப்புகள் 1970கள் மற்றும் 1980 களின் முற்பகுதியில் கட்டப்பட்டதால், அவை இனி குடியிருப்பாளர்களுக்கு வசதியாக இருக்காது என்று டத்தோ மந்திரி புசார் குறிப்பிட்டார்.

``அதனால், இந்த குறைந்த விலை அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களின் வசதியை உறுதிப்படுத்த மத்திய அரசிடம் இருந்து சிறப்பு நிதியை எதிர்பார்க்கிறேன்" என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

பங்சபுரி ஸ்ரீ பெரந்தௌவில் ஜெலாஜா கித்தா சிலாங்கூர் பென்யாங் திட்டத்தைத் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.