SELANGOR

ஜோம் ஷாப்பிங் வவுச்சர்களுக்குப் பிப்ரவரி 20 முதல் விண்ணப்பிக்கலாம் - கம்போங் துங்கு மாநிலச் சட்டமன்ற

16 பிப்ரவரி 2023, 4:13 PM
ஜோம் ஷாப்பிங் வவுச்சர்களுக்குப் பிப்ரவரி 20 முதல் விண்ணப்பிக்கலாம் - கம்போங் துங்கு மாநிலச் சட்டமன்ற

ஷா ஆலம்,  பிப் 17: கம்போங் துங்கு மாநிலச் சட்டமன்றத்திற்கான (DUN) ஸ்கீம் மெஸ்ர ஊசிய இமாஸ் (SMUE) மற்றும் ஸ்கீம் மெஸ்ர இன்சான் இஸ்திமேவா (SMIS) திட்டங்களுக்கான ஜோம் ஷாப்பிங் வவுச்சர்களுக்குப் பிப்ரவரி 20 முதல் விண்ணப்பிக்கலாம்.

அதன் பிரதிநிதி லிம் யி வெய், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், அடையாள அட்டையில் சிலாங்கூர் முகவரி இருத்தல் மற்றும் இந்த மாநிலத்தின் வாக்காளர்கள் ஆகிய தகுதிகள் இருந்தால் RM150 மதிப்புள்ள ஷாப்பிங் வவுச்சர்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றார்.

"புதிய விண்ணப்பப் படிவங்களை ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கம்போங் துங்கு சமூகச் சேவை மையம், தாமான் பாரமவுண்ட், பெட்டாலிங் ஜெயாவில் சமர்ப்பிக்க வேண்டும்.

"முந்தைய ஆண்டில் வவுச்சரைப் பெற்றவர்கள், smue.yawas.my/admin/online_semakan.php என்ற இணைப்பின் மூலம் விண்ணப்ப நிலையை சரி பார்த்து கொள்ளலாம். அவர்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை" என்று தெரிவித்தார்.

வெற்றிகரமான விண்ணப்பங்களுக்கான வவுச்சரைப் பெற ஒவ்வொரு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கம்போங் துங்கு சமூகச் சேவை மையத்திற்கு அடையாள அட்டையுடன் வர வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.

" பிரதிநிதி, பெறுநரின் அடையாள அட்டையின் நகலைக் கொண்டு வர வேண்டும் மற்றும் பிரதிநிதித்துவக் கடிதத்தில் கையெழுத்திட வேண்டும்," என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.