SELANGOR

இலவசமாக ஏற்பாடு செய்யப்படும் நாடகம் மற்றும் நடன வகுப்பில் கலந்து கொள்ள பொதுமக்கள் அழைக்கப்படுகின்றனர் - அம்பாங் ஜெயா நகராட்சி கழகம்

16 பிப்ரவரி 2023, 4:17 AM
இலவசமாக ஏற்பாடு செய்யப்படும் நாடகம் மற்றும் நடன வகுப்பில் கலந்து கொள்ள பொதுமக்கள் அழைக்கப்படுகின்றனர் - அம்பாங் ஜெயா நகராட்சி கழகம்

ஷா ஆலம், பிப் 16: இந்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மற்றும் மே மாதங்களில் இலவசமாக ஏற்பாடு செய்யப்படும் நாடகம் மற்றும் நடன வகுப்பில் கலந்து கொள்ளுமாறு அம்பாங் ஜெயா நகராட்சி கழகம் (MPAJ) பொதுமக்களை அழைக்கிறது.

பிப்ரவரி (11, 25 தேதிகள்), மார்ச் (4, 18 தேதிகள்) மற்றும் மே (13, 27 தேதிகள்) ஆகிய நாட்களில் நாடக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும், பிப்ரவரி (12, 19 தேதிகள்), மார்ச் (5, 18, 19 தேதிகள்) மற்றும் மே (7, 14, 18 தேதிகள்) ஆகிய நாட்களில் நடன வகுப்புகள் நடைபெறுகின்றன.

மெனாரா அம்பாங் ஜெயா நகராட்சி கழகம் பண்டான் இண்டா மற்றும் கேலரி அம்பாங் ஜெயா நகராட்சி கழகம் ஆகிய இடங்களில் இந்த வகுப்புகள் நடைபெறுகின்றன. மலேசியக் கலைப் பள்ளி ஆசிரியர்களும் மற்றும் சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் (MOTAC) பயிற்சியாளர்களும் இதில் கலந்து கொள்வர்.

"இதுவரை நடத்தப்பட்ட நாடக வகுப்பில் மொத்தம் 25 பங்கேற்பாளர்கள் நடன வகுப்பில் 21 பேரும் கலந்து கொண்டனர்   என்று அம்பாங் ஜெயா நகராட்சி கழகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆர்வமுள்ள பொதுமக்கள் அம்பாங் ஜெயா நகராட்சி கழக முகநூல் மூலம் இந்நிகழ்வுகள் தொடர்புடைய தகவல்களைப் பெற முடியும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.