ஷா ஆலம், பிப்.16: பத்தாங் காலி மாநிலச் சட்டமன்ற சமூகச் சேவை மையம் நேற்று ஏற்பாடு செய்த அடிப்படை முடி வெட்டும் பயிற்சியில் 20 இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
இளைஞர்கள் முடி வெட்டும் நுட்பங்களைக் கற்றுக்கொள்ள உதவும் நோக்கில் இத்திட்டம் ஸ்ட்ரீட் ஃபேட் பார்பர் ஷாப்பில் டீம் சிலாங்கூர் உடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டதாக அதன் ஒருங்கிணைப்பாளர் கூறினார்.
இத்திட்டத்தில் பங்கேற்பாளர்கள் தங்கள் அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்தி வருமானத்தை ஈட்டவும், தங்கள் சொந்த தொழில்களைத் தொடங்கவும் முடியும் என்று சைபுடின் ஷாபி முகமட் நம்புகிறார்.
"முடி வெட்டுதல், தொலைப் பேசிகளைப் பழுதுபார்த்தல் மற்றும் ஹிப்ஸ்டர் காபி விற்பது போன்ற சொந்தத் தொழிலை நடத்த விரும்பும் இளைஞர்களின் சமீபத்திய விருப்பங்களையும் 'வாழ்க்கை முறையையும்' நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த நிகழ்ச்சிக்காக தனது கடையைப் பயன்படுத்த அனுமதித்த ஸ்ட்ரீட்ஃபேட் முடிதிருத்தும் கடை உரிமையாளர் முகமட் அய்சுடின் லோக்மானுக்கும் சைபுடின் தனது நன்றியைத் தெரிவித்தார்.
"இது போன்ற ஒரு திட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக டீம் சிலாங்கூருக்கும் நன்றி. எதிர்காலத்தில் இதுபோன்ற பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என நம்புகிறேன்,'' என்றார்.
ஆர்வமுள்ள பங்கேற்பாளர்களுக்குத் தொடர்ந்து இத்திட்டம் ஏற்பாடு செய்வதோடு, அவர்கள் நடமாடும் வணிகத்தைத் தொடங்குவதற்கு உபகரணங்களை வழங்க உதவுவதாகவும் அவர் கூறினார்.








