SELANGOR

4,000 ஜோம் ஷாப்பிங் வவுச்சர்கள் ஸ்கீம் மெஸ்ர ஊசிய இமாஸ் (SMUE) உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது - ராவாங் மாநிலச் சட்டமன்றம்

15 பிப்ரவரி 2023, 9:33 AM
4,000 ஜோம் ஷாப்பிங் வவுச்சர்கள் ஸ்கீம் மெஸ்ர ஊசிய இமாஸ் (SMUE) உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது - ராவாங் மாநிலச் சட்டமன்றம்

ராவாங், பிப் 15: ராவாங் மாநிலச் சட்டமன்ற (DUN) சமூகச் சேவை மையம், கிட்டத்தட்ட 4,000 ஜோம் ஷாப்பிங் வவுச்சர்களை ஸ்கீம் மெஸ்ர ஊசிய இமாஸ் (SMUE) உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளது.

RM150 மதிப்புள்ள ஷாப்பிங் வவுச்சரை இதுவரை பெறாத உறுப்பினர்களை உடனடியாக மாநிலச் சட்டமன்றச் சமூகச் சேவை மையத்திற்கு சென்று அதைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள் என்று ரவாங் மாநிலச் சட்டமன்றத்தின் சிறப்பு உதவியாளர் கூறினார்.

"இந்த ஆண்டு 60 வயதை அடைந்து ஆனால், இன்னும் ஸ்கீம் மெஸ்ர ஊசிய இமாஸில் (SMUE) பதிவு செய்யாத மூத்தக் குடிமக்கள் இருந்தால், அவர்கள் முதலில் வாக்களிப்பு மையங்களின் விவரங்களை சரிபார்க்க வேண்டும்.

"அவர்களின் வாக்குச்சாவடி பிற இடங்களில் இருந்தால், ஜோம் ஷாப்பிங் வவுச்சரைப் பெறத் தொடர்புடைய சேவை மையத்திற்குச் சென்று பதிவு செய்ய வேண்டும்" என்று ஐனுல் ஐசுரா அஹ்சன் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.