SELANGOR

வாகன நிறுத்துமிட அபராதம் குறைக்கப்படுகிறது - கோலா லங்காட் நகராட்சி கழகம்

15 பிப்ரவரி 2023, 2:27 AM
வாகன நிறுத்துமிட அபராதம் குறைக்கப்படுகிறது - கோலா லங்காட் நகராட்சி கழகம்

ஷா ஆலம், பிப் 15: கோலா லங்காட் நகராட்சி கழகம் (எம்பிகேஎல்), வாகன நிறுத்துமிட

அபராதத்தை நேற்று தொடங்கி ஜூன் 30 வரை குறைக்கும் சலுகையை வழங்கியுள்ளது..

கோலா லங்காட் நகராட்சி கழகம், 2022 மற்றும் அதற்கு முந்தைய ஆண்டு

அபராதங்களுக்கு RM15 மற்றும் 24 மணி நேரத்திற்குள் செலுத்தப்படும் அபராதத்திற்கு

RM10ஐயும் குறைக்கிறது.

நீதிமன்ற நடவடிக்கை எடுப்பதற்கு முன், உங்கள் அபராதத் தொகையை செலுத்த இந்த

வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஸ்மார்ட் சிலாங்கூர் பார்க்கிங் அப்ளிகேஷன் மூலமாகவோ அல்லது கோலா லங்காட்

நகராட்சி கழகக் கவுண்டரிலோ எளிதாக பணம் செலுத்தலாம் என்று முகநூல் மூலம்

தெரிவிக்கப்பட்டது.

மேலும் தகவலுக்கு, 03-3181 1809 அல்லது 012-300 4897 (WhatsApp) என்ற எண்ணில்

போக்குவரத்து காவலர் பிரிவு, கோலா லங்காட் நகராட்சி கழக அமலாக்கத் துறையைத்

தொடர்பு கொள்ளவும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.