ஷா ஆலம், பிப் 15 - உயர்கல்வியைத் தொடர விரும்பும் சிலாங்கூரைச் சேர்ந்த மாணவர்கள் மந்திரி புசார் சிறப்பு உபகாரச் சம்பளத் திட்டம் மற்றும் “பிஞ்சாமான் போலே உபா லுவார் நெகாரா“ எனும் வெளிநாடுகளில் பயிலும் சிலாங்கூர் மாணவர்களுக்கான வட்டியில்லா
கடனுவித் திட்டம் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கலாம்.
இவ்விரு கல்வி உதவித் நிதித் திட்டங்களுக்கும் வரும் மார்ச் மாதம் 1ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இளங்கலை பட்டப்படிப்பு முதல் முனைவர் பட்டப் படிப்பு வரை கல்வியைத் தொடரும் மாணவர்களுக்காக இவ்விரு சிறப்பு கல்வி உதவித் திட்டங்களும் அமல்படுத்தப்படுவதாக அவர் சொன்னார்.
இந்த கல்வித் திட்டங்களுக்கு வரும் மார்ச் 1 தேதிக்குள் விண்ணப்பம் செய்யும்படி சிலாங்கூர் மாநில உபகாரச் சம்பள நிதி வாரியம் கேட்டுக் கொள்கிறது என அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
இந்த கல்வி உதவி நிதித் திட்டத்தில் பங்கேற்பதற்கான தகுதி உள்ளிட்ட விபரங்களை https://danapendidikan.selangor.gov.my/ எனும் அகப்பக்கம் வாயிலாக அல்லது 03-5521 2275, 03-5544 7543 தொலைபேசி எண்களில் மற்றும் e-mel tkwbns@selangor.gov.my எனும் மின்னஞ்சல் வழி பெற்றுக் கொள்ளலாம்.
உயர்கல்வி உபகாரச் சம்பளம் மற்றும் 100 தலைசிறந்த வெளிநாட்டு உயர்கல்விக் கூடங்களில் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் திட்டங்களுக்குக் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி தொடங்கி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.








