ஷா ஆலம், பிப் 14: மாநில அரசு ஏற்பாடு செய்யும் திட்டங்களுக்குப் பொதுமக்கள் விண்ணப்பிக்க உதவுவதற்காகப் பலக்கோங் மாநிலச் சட்டமன்ற சமூகச் சேவை மையம் இந்த வாரம் தொடங்கி ஒவ்வொரு சனிக்கிழமையும் நடமாடும் கவுண்டரைத் திறக்கும்.
பொது இடங்களில் காலை 9 மணி முதல் 11 மணி வரை கவுண்டர் திறக்கப்படும் என்று பலக்கோங் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் (ADN) தெரிவித்தார்.
இன்று தொடர்பு கொண்டபோது, வோங் சியூ கி, "பலக்கோங் குடியிருப்பாளர்கள் எனது முகநூல் மூலம் நடமாடும் கவுண்டர் இருக்கும் இடத்தைக் கண்டறிய முடியும்" என்றார்.
பிரதிநிதியின் கூற்றுப்படி, தேவைப்படும் குடியிருப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஒரு வழக்கறிஞர் நடமாடும் கவுண்டரில் இருப்பார்.
"இந்த நடமாடும் கவுண்டர் வழங்கும் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பலக்கோங் மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.
"நடமாடும் கவுண்டர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு வர விரும்பும் குடியிருப்போர் சங்கங்கள் எனது அலுவலகத்தை 03-90760331 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களைத் தொடர்பு கொள்ளலாம்" என்று அவர் கூறினார்.
நடமாடும் கவுண்டருக்குச் செல்ல நேரமில்லாதக் குடியிருப்பாளர்கள், திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் பலக்கோங் மாநிலச் சட்டமன்ற சமூகச் சேவை மையத்திற்கு வருகை புரியலாம் என்று அவர் கூறினார். ஆனால், அங்கு வழக்கறிஞர் சேவை வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.








