SELANGOR

மலிவு விற்பனையில் இறைச்சி மற்றும் அரிசி மக்களின் விருப்பமாக இருந்தது - ரவாங் மாநிலச் சட்டமன்றம்

14 பிப்ரவரி 2023, 8:46 AM
மலிவு விற்பனையில் இறைச்சி மற்றும் அரிசி மக்களின் விருப்பமாக இருந்தது - ரவாங் மாநிலச் சட்டமன்றம்

ரவாங், பிப் 14: மாநிலத்தில் பல இடங்களில் நடத்தப்பட்ட மலிவு விற்பனையில் கோழி மற்றும் முட்டைகள் அதிகம் விற்பனை ஆகியது. ஆனால், ரவாங் மாநிலச் சட்டமன்றத்தில் (டுன்) நடத்தப்படும் மலிவு விற்பனையில் இறைச்சி மற்றும் அரிசி மக்களின் விருப்பமாக இருந்தது.

ரவாங் மாநிலச் சட்டமன்றம் மலிவு விற்பனைக்கு வந்த பொதுமக்கள் ஒரு மூட்டைக்கு மேல் அரிசி வாங்கினார்கள், ஏனெனில் கொள்முதல் வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை.

விற்பனை தொடங்கிய 40 நிமிடங்களுக்குள் 150 கம்பிட் அரிசி மற்றும் 180 இறைச்சி பேக்கட்டுகள் விற்று விட்டதாகச் சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகத்தின் (PKPS) நிர்வாகம் மற்றும் செயல்பாட்டு உதவியாளர் தெரிவித்தார்.

மலிவு விலையில் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மாநில அரசு ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் 400க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் கலந்து கொண்டனர் என்று நோர் அஸ்யதி ஹசான் கூறினார்.

அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் இருந்ததால், கோழி மற்றும் முட்டை விற்பனை எண்ணிக்கையை நாங்கள் கட்டுப்படுத்தினோம். அதனால் அனைவருக்கும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு வாய்ப்பு கிட்டியது.

சிலாங்கூர் வேளாண்மை மேம்பாட்டு கழகத்தால் (PKPS) நடத்தப்படும் மலிவு விற்பனைத் திட்டம் ஜனவரி 16 முதல் மார்ச் வரை வெள்ளிக்கிழமை தவிர ஒவ்வொரு நாளும் ஒன்பது இடங்களில் தொடர்கிறது. இரண்டு மில்லியனுக்கும் அதிகமான சிலாங்கூர் குடியிருப்பாளர்கள் இந்த விற்பனையால் பயனடைந்தனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.