SELANGOR

பள்ளி விடுமுறை காலம் முழுவதும் பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் - ஷா ஆலம் தேசியத் தாவரவியல் பூங்கா

13 பிப்ரவரி 2023, 7:51 AM
பள்ளி விடுமுறை காலம் முழுவதும் பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் - ஷா ஆலம் தேசியத் தாவரவியல் பூங்கா

ஷா ஆலம், பிப் 13: ஷா ஆலம் தேசியத் தாவரவியல் பூங்கா (டிபிஎன்எஸ்ஏ) பள்ளி விடுமுறை காலம் முழுவதும் பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் மற்றும் விற்பனைகளை ஏற்பாடு செய்து வருகிறது.

பிப்ரவரி 18 முதல் மார்ச் 19 வரை ஒவ்வொரு நாளும் காலை 7.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பூங்கா செயல்படும் என்று டிபிஎன்எஸ்ஏ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

"வண்ணம் தீட்டுதல், தேங்காய் வீசுதல், வில்வித்தை, மார்க்கெட், நிஞ்ஜா போர்வீரன் (வோரியர்) விளையாட்டு மற்றும் பல நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன" என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

நுழைவுச் சீட்டின் விலை, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு RM1 மற்றும் பதின்வயதினர் மற்றும் பெரியவர்களுக்கு RM3 ஆகும்.

செக்‌ஷன் U11 அமைந்துள்ள பூங்கா பார்வையாளர்களுக்கு இலவச டிராம் (trem) சேவையையும் வழங்குகிறது.

டிபிஎன்எஸ்ஏ ஏப்ரல் 1986 இல் 817 ஹெக்டேர் பரப்பளவில் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.