ஷா ஆலம், பிப் 8- வரும் பிப்ரவரி 16 ஆம் தேதி நாடாளுமன்றம் மற்றும் மாநிலச்சட்டப் மன்றத்திற்கான பயணத்தில் பங்கு கொள்ளுமாறு பண்டார் உத்தாமா தொகுதி உறுப்பினர் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த பயணமானது இளைஞர்களுக்கு மக்கள் மன்றத்தின் சூழலை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தொகுதி உறுப்பினர்
ஜமாலியா ஜமாலுடின் கூறினார் .
இந்த பயணத்தில் 16 முதல் 30 வயது வரையிலான இளைஞர்களுக்கு வாய்ப்பு
வழங்கப்படும். பயணம் முற்றிலும் இலவசம். குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என்பதால் விரைந்து பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் பேஸ்புக் பதிவில் கூறினார்.
பண்டார் உத்தாமா சட்டமன்றத் தொகுதியின் சிலாங்கூர் இளைஞர் இயக்கத்துடன்
இணைந்து நடத்தப்படும் இந்த நிகழ்வு காலை 8.30 முதல் மாலை 6 மணி வரை
நடைபெறும்.
இச்சுற்றுலாவில் பங்கேற்க விரும்புவோர் காலை 8.30 மணிக்கு முன்னதாகக் கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையத்தில் ஒன்றுகூடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த பயணத்திற்கு http://shorturl.at/luAFG என்ற இணைப்பின் மூலம் பதிவு
செய்யலாம் .
SELANGOR
பண்டார் உத்தாமா தொகுதி ஏற்பாட்டில் நாடாளுமன்றம், சிலாங்கூர் சட்டமன்றத்திற்குச் சுற்றுப் பயணம்- இளையோர் பங்கேற்க அழைப்பு
8 பிப்ரவரி 2023, 8:59 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
ஜோஹான் செத்தியாவில் மோசமடைந்தது காற்றின் தரம்
Media Selangor Team
13 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூரின் மூன்று ஊராட்சி அமைப்புகளுக்கு தேசிய அளவில் அங்கீகாரம்
Media Selangor Team
13 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூரில் காற்றுத் தரம் மேம்பட்டுள்ளது
Media Selangor Team
13 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூர் அரையாண்டு முதலீட்டு மதிப்பு RM70 பில்லியன்; சேவை, உற்பத்தித் துறைகள் முக்கிய பங்கு
Bernama
12 செப்டெம்பர் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



