SELANGOR

ஒன்பது மாநிலச் சட்ட மன்ற தொகுதிகளில் மலிவு விற்பனை

8 பிப்ரவரி 2023, 3:00 AM
ஒன்பது மாநிலச் சட்ட மன்ற தொகுதிகளில் மலிவு விற்பனை

ஷா ஆலம், பிப்.8: சந்தை விலையை விட அடிப்படைப் பொருட்களை மலிவாக வழங்கும் மாநில அரசின் மலிவு விற்பனைத் திட்டம், ஒன்பது மாநிலச் சட்ட மன்றங்களில் (டுன்) இன்றும் தொடரும்.

மக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில், பெக்கான் பத்து 39, சபாக் பெர்னாம் சுங்கை (டுன் சுங்கை ஆயர் தாவார்) மற்றும் ஜெயா செத்தியா (டுன் இஜோக்) ஆகிய இடங்களில் இம்மலிவு விற்பனை நடைபெறும். 

மேலும், அல் அஹ்மடி மஸ்ஜித் வளாகம் (டுன் சுங்கை புரோங்)பிரிவு 19 கவுன்சிலர் அலுவலகம் (டுன் குவாங்), கம்போங் கெமென்சா (டுன் உலு கெலாங்) மற்றும் ஜாலான பூங்கா மெலோர் லெம்பா மாஜூ (டுன் தெரதை), புச்சோங் உத்தாமா (டுன் ஶ்ரீ செர்டாங்), பலாய் பெங்குலு ஜோஹன் செத்தியா (டுன் சுங்கை கண்டிஸ்) மற்றும் சுங்கை மங்கீஸ் (டுன் பந்திங்) ஆகிய இடங்களிலும் இவ்விற்பனை தொடரும்.

பொதுமக்கள் அவ்வப்போது விற்பனை இடங்களைப் பற்றிய தெரிந்துகொள்ள linktr.ee/myPKPS என்ற இணைப்பைப் பார்வையிடலாம்.

 

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.