SELANGOR

இன்று தொடங்கி ஒன்பது மாநிலச் சட்டமன்றங்களில் மலிவு விற்பனை தொடரும்

7 பிப்ரவரி 2023, 4:13 AM
இன்று தொடங்கி ஒன்பது மாநிலச் சட்டமன்றங்களில் மலிவு விற்பனை தொடரும்

ஷா ஆலம், பிப் 7: சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகம் (பிகேபிஎஸ்) ஏற்பாடு செய்துள்ள மலிவு விற்பனை திட்டம்,  இன்று தொடங்கி சுங்கை துவா உட்பட ஒன்பது மாநிலச் சட்டமன்றங்களில் (டுன்) நடைபெறவுள்ளது.

கம்போங் நகோடா (டுன் சுங்கை துவா), ரோஸ்வுட் அடுக்குமாடி குடியிருப்பு, தாசெக் புத்ரி (டுன் குவாங்) மற்றும் பிளாட் போஸ்னியா (டுன் ஶ்ரீ செர்டாங்) ஆகிய இடங்களில் இம்மலிவு விற்பனை நடைபெறும்.

மேலும், இந்த விற்பனை ஜாலான் நிர்வானா 1/1, தாமான் நிர்வானா (DUN பண்டான் இண்டா), பயா ஜாராஸ் டாலாம் ( டுன் பயா ஜாராஸ்) மற்றும் ஜாலான் காமிஸில் உள்ள சுராவ் ஹாஜி மாட் சோமின் வளாகம் (டுன் மேரு), புக்கிட் நாகா மசூதி (டுன் சுங்கை கண்டிஸ்), கம்போங் ஜென்ஜரோம் (டுன் சிஜாங்காங்), கம்போங் எண்டாவில் உள்ள அட்-தொய்பின் மசூதி வளாகம் (டுன் தஞ்சோங் செபாட்) ஆகிய இடங்களிலும் நடைபெறவுள்ளது.

மேலும் தகவல்களுக்குப் பொதுமக்கள் சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகச் சமூக வலைத்தளத்தைப் பார்வையிடலாம் அல்லது https://linktr.ee/myPKPS என்ற அகப்பக்கத்தின் மூலம் அவ்வப்போது விற்பனை நடக்கும் இடங்களை அறியலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.