SELANGOR

வாகனம் இல்லா நாள் @ செலாமட் பாகி சுபாங் ஜெயா நிகழ்வில் சுமார் 1,000 பேர் கலந்து கொண்டனர்

5 பிப்ரவரி 2023, 9:55 AM
வாகனம் இல்லா நாள் @ செலாமட் பாகி சுபாங் ஜெயா நிகழ்வில் சுமார் 1,000 பேர் கலந்து கொண்டனர்

சுபாங் ஜெயா, பிப் 5: இன்று ஏயோன் பிக் சுபாங் ஜெயா பல்பொருள் அங்காடிக்கு முன்னால் உள்ள ஜாலான் எஸ்எஸ்16/1 இல் எம்பிஎஸ்ஜே வாகனம் இல்லா நாள் @ செலாமட் பாகி சுபாங் ஜெயா நிகழ்வில் சுமார் 1,000 பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சிலாங்கூர் மாநிலத் துணைச் செயலாளர் (வளர்ச்சி) டத்தோ ஜோஹாரி அனுவார் கூறுகையில், காலை 7 மணி முதல் 11 மணி வரை இந்நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது, மேலும் தற்போது இது ஏழாவது முறையாக நடத்தப்படுகிறது எனக் குறிப்பிட்டார்.

இம்முறை இந்நிகழ்வில் எண்டுரன்ஸ் சேலஞ்ச் (சைக்கிள்) 100 கிலோமீட்டர் மற்றும் சிறு குழந்தைகளுக்கான சைக்கிள் தள்ளும் போட்டிகள் நடத்தப்பட்டன.

"சைக்கிள் ஓட்டும் போட்டியில் 200 நபர்களும் சைக்கிள் தள்ளும் போட்டியில் 50 குழந்தைகளும் கலந்து கொண்டனர்.

"இந்நிகழ்வில் எகோ ஃப்ரீ மார்க்கெட்,  மெது ஓட்டம், உணவு திருவிழா மற்றும் அதிர்ஷ்டக் குலுக்கல் போன்றவையும் ஏற்பாடு செய்திருந்தோம்," என்று ஜோஹாரி தெரிவித்தார்.

2030 ஆம் ஆண்டுக்குள் சுபாங் ஜெயாவை ஒரு குறைந்த கார்பன் நகரமாக மாற்றும் முயற்சியில் இந்நிகழ்வு ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படுகிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.