SELANGOR

முதலில் வரி செலுத்துவோருக்கு 2,500 பிரத்யேக (NFC) டச் என் கோ கார்டுகள் - கோலா லங்காட் நகராண்மை கழகம்

3 பிப்ரவரி 2023, 3:49 AM
முதலில் வரி செலுத்துவோருக்கு 2,500 பிரத்யேக (NFC) டச் என் கோ கார்டுகள் - கோலா லங்காட் நகராண்மை கழகம்

ஷா ஆலம், பிப் 3: கோலா லங்காட் நகராண்மை கழகம் (MPKL) முதலில் வரி செலுத்துவோருக்கு 2,500 பிரத்யேக (NFC) டச் என் கோ கார்டுகளை வழங்குகிறது.

இந்த சலுகையின் காலம் ஜனவரி 1 முதல் பிப்ரவரி 28 வரை வரையறுக்கப்பட்டுள்ளது என்று நகராண்மை கழகம் தெரிவித்துள்ளது.

"கோலா லங்காட் நகராண்மைக் கழகத்தின் அதிர்ஷ்டக் குலுக்குப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை தவறவிடாதீர்கள் மற்றும் ஒரு பிரத்யேக (NFC) டச் என் கோ கார்டு பெறுவதற்கான வாய்ப்பை பெறுங்கள்.

"2,500 கார்டுகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும், வெற்றியாளர்களின் பட்டியல் மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படும்" என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு கோலா லங்காட் நகராண்மை கழக வருவாய் பிரிவை 03-3853 0303 நீட்டிப்பு 1213 என்ற எண்ணில் அல்லது 019-471 6755 வாட்சப் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம்.

ஆரம்பகால மின்-பில் பதிவு செய்தவர்கள் மற்றும் வரி செலுத்தியவர்கள் அதிர்ஷ்டக் குலுக்கல் பங்கேற்பதற்கான நிபந்தனைகள் பின்வருமாறு:

1. மதிப்பீட்டு வரி இ-பில் பதிவு செய்யவும்

2. மதிப்பீட்டு வரி 2023ஆம் ஆண்டு முழுவதுமாகச் செலுத்துதல்

3. கடந்த கால வரி பாக்கிகள் இல்லை

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.