ECONOMY

சீர்திருத்த மையத்திலிருந்து தப்பியோடிய கைதி ஆறு நாட்களுக்குப் பின்னர் மீண்டும் பிடிபட்டார்

31 ஜனவரி 2023, 9:18 AM
சீர்திருத்த மையத்திலிருந்து தப்பியோடிய கைதி ஆறு நாட்களுக்குப் பின்னர் மீண்டும் பிடிபட்டார்

ஜாசின், ஜன 31- சீர்திருத்த மையத்திலிருந்து தப்பியோடிய கைதி ஆறு தினங்களுக்கு பின்னர் நேற்றிரவு அலோர் காஜா பகுதியில் மீண்டும் பிடிபட்டார்.

நேற்றிரவு 9.00 மணியளவில் கைது செய்யப்பட்ட 43 வயதுடைய அந்த ஆடவர் தடுப்புக் காவல் அனுமதிக்காக இன்று காலை ஜாசின் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கொண்டு வரப்பட்டதாக ஜாசின் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் ஏ.எஸ்.பி. முகமது பாட்சில் ஓத்மான் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 223 மற்றும் 224 பிரிவுகளின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

இம்மாதம் 24 ஆம் தேதி தப்பியோடிய அந்தக் கைதியை தேடும் பணியை போலீசார் முடுக்கி விட்டுள்ளதாக ஊடகங்கள் இதற்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தன. அந்த கைதி காணாமல் போனதை அன்றைய தினம் 2.20 மணியளவில் வார்டன்கள் கண்டு பிடித்தனர்.

வகைeconomy

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.