SELANGOR

சுபாங் ஜெயா மாநகராட்சி மன்றம் (MBSJ) மதிப்பீட்டு வரி செலுத்துவோருக்கு RM15 தள்ளுபடி

28 ஜனவரி 2023, 9:15 AM
சுபாங் ஜெயா மாநகராட்சி மன்றம் (MBSJ) மதிப்பீட்டு வரி செலுத்துவோருக்கு RM15 தள்ளுபடி

ஷா ஆலம், ஜன 28: சுபாங் ஜெயா மாநகராட்சி மன்றம் (MBSJ) மதிப்பீட்டு வரி செலுத்துவோருக்கு RM15 தள்ளுபடியை வழங்குகிறது.

சுபாங் ஜெயா மாநகராட்சி மன்றத்தின் கார்ப்பரேட் மற்றும் மூலோபாய மேலாண்மை துறையின் துணை இயக்குனர் கூறுகையில், வரி செலுத்துபவர் தள்ளுபடி சலுகையை பெறுவதற்குப் பிப்ரவரி 28 க்கு முன் வரியைச் செலுத்த வேண்டும்.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு முதலில் வரி செலுத்தும் 75,000 பேருக்கு பாராட்டு தெரிவிக்கும் அடையாளமாக இந்த தள்ளுபடியை தருவதாக அஸ்ஃபரிசல் அப்துல்லா ரஷித் விளக்கினார்.

"இந்தத் தள்ளுபடியைப் பெறுவதற்குத் தகுதி பெற, வாடிக்கையாளர்கள் 2023 ஆம் ஆண்டின் முதல் மற்றும் இரண்டாவது தவணைக்கான வரி பாக்கிகள் ஏதுமில்லாமல் அனைத்து தொகையும் செலுத்த வேண்டும்.

"மேலும், ``EzyMbsj`` போர்டல், ``EzyPay`` கைப்பேசி செயலி, E-masspro மற்றும் கியோஸ்க் கட்டண முறை (பணமில்லா) ஆகிய நான்கு தளங்கள் மூலம் பணம் செலுத்த வேண்டும்" என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

வாடிக்கையாளர்கள் இந்த ஜூன் முதல் அறிக்கைகள் மூலம் தள்ளுபடியை சரிபார்க்கலாம். இரண்டாவது கால வரி செலுத்தும் காலம் முடிந்த பிறகு கணக்கு சரி செய்தல் மூலம் வரவு வைக்கப்படும்.

வாடிக்கையாளர்கள் சுவரொட்டியில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து பில் சரிபார்த்து ``EzyMBSJ`` உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம் என்றார்.

மேலும் தகவலுக்கு, www.mbsj.gov.my மற்றும் சுபாங் ஜெயா மாநகராட்சி மன்றத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகத் தளத்தைப் பார்வையிடவும் அல்லது சுபாங் ஜெயா மாநகராட்சி மன்ற அழைப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை  03-80247700 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.