ஷா ஆலம், ஜன 26- ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் (எம்.பி.எஸ்.ஏ.) ஏற்பாட்டிலான நடமாடும் முகப்பிட சேவை இங்குள்ள செக்சன் யு13, லோட்டஸ் செத்தியா ஆலம் கார் நிறுத்துமிடத்தில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.‘ஷா ஆலம் ஒன் வீல்ஸ்‘ எனப்படும் இந்த சேவை காலை 11.00 மணி முதல் மாலை
5.00 மணி வரை நடைபெறும் என்று மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் பொது
உறவுப் பிரிவின் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.
மாநகர் மன்றம் சம்பந்தப்பட்ட பணிகளை அலுவலகத்திற்கு வராமல் வார இறுதி
நாட்களில் கவனிப்பதற்கு ஏதுவாக இந்த நடமாடும் முகப்பிடச் சேவை
ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
மதிப்பீட்டு வரியைச் சரி பார்த்து செலுத்துவது, கார் நிறுத்துமிட அபராதங்களைச் செலுத்துவது, புகார்களைத் தெரிவிப்பது மற்றும் லைசென்ஸ் விண்ணப்பங்களின் நிலையை அறிந்து கொள்வது உள்ளிட்ட பணிகளை இந்த நடமாடும் முகப்பிடத்தில் பெறலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
நிலுவையில் உள்ள அபராதத் தொகையை செலுத்துவது உள்ளிட்ட பணிகளை
பொதுமக்கள் எளிதாக மேற்கொள்வதற்கு ஏதுவாக இத்தகைய நடமாடும் முகப்பிடச் சேவைகளை மாநகர் மன்றம் இதற்கு முன்னர் பல இடங்களில் நடத்தியுள்ளது.
SELANGOR
லோட்டஸ் செத்தியா ஆலமில் எம்.பி.எஸ்.ஏ.வின் நடமாடும் முகப்பிடச் சேவை
26 ஜனவரி 2023, 9:06 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
புக்கிட் அந்தாராபங்சா தொகுதியில் 296 மாணவர்களுக்கு ‘மீண்டும் பள்ளிக்குச் செல்வோம்’ திட்டத்தின் கீழ் கல்வி உதவி வழங்கப்பட்டது
Shalini Rajamogun
25 மார்ச் 2026

selangor
லெமாங், கெதுப்பாட், பட்டாசு விற்பனை: கடும் நிபந்தனைகளை விதித்தது அம்பாங் ஜெயா நகராண்மை கழகம்
Shalini Rajamogun
20 மார்ச் 2026

selangor
சிலாங்கூர் மாநிலத்தின் உணவு இருப்பு 6 மாதங்களுக்கு உயர்த்தப்படும் – மந்திரி புசார் அறிவிப்பு
Shalini Rajamogun
20 மார்ச் 2026

national
மலேசியாவின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Shalini Rajamogun
20 மார்ச் 2026

உங்கள் கருத்து என்ன?




